உலகில் அதிகப்படியான மரணத்தை சந்தித்த நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர். இது உலகிலேயே அதிக மரணம் ஆகும். அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 510 பேர். இதில் 13 ஆயிரத்து 798 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் பாதித்தவர்கள் 98 ஆயிரத்து 010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8, 911 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் 55 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டனர். 6,159 பேர் பலியாகினர். இந்தியாவில் 4, 858 பேர் பாதிக்கப்பட்டு 136 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் 3, 139 பேர் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 13, 912 பேர் பாதிக்கப்பட்டு 231 பேர் இறந்துள்ளனர். இலங்கையில் 159 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர்.
ஈரானில் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு, 3,872 பேர் பலியாகினர். ஜெர்மனியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டு 1,854 பேர் பலியாகினர். பெல்ஜியத்தில் 22 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு 2,035 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்தில் 19,580 பேர் பாதிக்கப்பட்டு 2,101 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் 4, 100 பேர் பாதிக்கப்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.