மேற்காசிய நாடான ஈரானில் தவித்த, 195 இந்தியர்கள், நேற்று(மார்ச் 19), அழைத்து வரப்பட்டனர். ஈரானின் மகான் விமானத்தின், இரண்டு விமானம் மூலம் அவர்கள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், நமது நாளிதழ்க்கு, தொலைபேசியில் கூறிய தகவல்கள்: பல்வேறு காரணங்களுக்காக ஈரானுக்குச் சென்றிருந்தோம். 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், தலைநகர் டெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் அல்லோலகலப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும், நாடு திரும்புவதற்கு, அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலம் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். கடும் போராட்டத்திற்குப் பிறகே, சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளோம். எங்களுக்கு அங்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதால், அழைத்து வந்தனர். இங்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள, ராணுவத்தின் சிறப்பு மருத்துவ நல மையத்தில் தங்க வைக்கப்பட்டோம். இந்த மையம், தற்போது, கொரோனாவுக்கான தனிமை மையமாக உள்ளது. அடுத்த, 14 நாட்களுக்கு, இங்கு தங்கியிருக்க வேண்டும்.
தனிமை மையத்தில் நடப்பது என்ன? ஈரானில் இருந்து வந்தவர்கள் வாக்குமூலம்