ஒவ்வொரு நாளும் காலை, 6:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை, 7:00, பகல், 11:00 மற்றும் மாலை, 5:00 மணிக்கு தேநீர் வழங்கப்படுகிறது. காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, காலை உணவு வழங்கப்படுகிறது. மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை மதிய உணவும், இரவு, 7:30 முதல், 8:30 மணி வரை இரவு உணவும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பராக்குக்கும், தனி தனி நேரத்தில், உணவு பரிமாறப்படுகிறது.கடும் முயற்சிக்களுக்குப் பிறகே, எங்களை மத்திய அரசு மீட்டு வந்துள்ளது. இங்குள்ள வசதிகள் பாராட்டக் கூடியதாக உள்ளது. ஆனால், தனித் தனி அறைகளில் தங்க வைக்காமல், ஒரு குழுவாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலருக்கு பாதிப்பு இருந்தாலும், மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் உள்ளோம். ஏற்கனவே டெஹ்ரானில் பரிசோதனைகள் செய்தனர். தற்போதும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருவதற்காக காத்திருக்கோம். அதுவரை, அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஒவ்வொரு நாளும் காலை, 6:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டு